கூடலூரில் பால் பண்ணை உரிமையாளர் வீட்டில் 17 பவுன் நகைகள் திருட்டு: கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் கைவரிசை

கூடலூரில் பால் பண்ைண உரிமையாளர் வீட்டில் பீரோவில் கள்ளச்சாவி போட்டு 17 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-08-18 17:25 GMT

பால் பண்ணை உரிமையாளர்

தேனி மாவட்டம் கூடலூர் 1-வது வார்டு பசும்பொன்நகர் பகுதியை சேர்ந்த சின்னச்சாமி மனைவி வனிதா (வயது 39). பால் பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவர், தனது மகள் திருமணத்திற்காக 17 பவுன் நகைகளை பீரோவில் வைத்திருந்தார். கடந்த 15-ந்தேதி காலை பீரோவை திறந்து பார்த்தபோது நகைகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் பல்வேறு இடங்களில் தேடினார்.

ஆனால் நகைகள் கிடைக்கவில்லை. அப்போது தான் நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கூடலூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது.

திருட்டு

அது திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிப்போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் பீரோவில் கள்ளச்சாவி போட்டு மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களும் நகைகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பீரோவில் கள்ளச்சாவி போட்டு நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்