கோபியில் வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சி

கோபியில் வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சி நடந்தது.

Update: 2023-09-23 22:23 GMT

கோபியில் வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சி நடந்து வருகிறது. கோபியில் உள்ள தனியாா் கல்யாண மண்டபத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து கண்காட்சி நிர்வாகிகள் கூறியதாவது:-

பெரும் நகரங்களில் கிடைக்கும் அனைத்து பொருட்களும், பொழுதுபோக்குகளும் பின்தங்கிய கிராம மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வளர்ந்து வரும் நகர்ப்பகுதிகளில் தொடர்ந்து வீட்டு உபயோகப்பொருள் கண்காட்சிகள் நடத்தி வருகிறோம். அதன்படி கோபியில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீடுகள், அலுவலகங்களுக்கான பர்னிச்சர்கள், கார்கள், மோட்டார் சைக்கிள்கள், உணவு பொருட்கள், பெண்களை கவரும் ஆடைகள், அலங்கார பொருட்கள், அழகுசாதன பொருட்கள், அலங்கார நகைகள், ஊறுகாய், முறுக்கு மற்றும் வீடுகளை சுத்தம் செய்யும் பொருட்கள், உடற்பயிற்சி மற்றும் உடல் மசாஜ் பொருட்கள் குவிக்கப்பட்டு உள்ளன.

செல்லப்பிராணிகள், வண்ண மீன்களுக்கு என்று தனியாக அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. குழந்தைகள் குதூகலித்து விளையாட பல்வேறு விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சிக்கு வரும் அனைத்து குழந்தைகளுக்கும் வண்ண மீன்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. 3 வயது முதல் 12 வயது வரையான பெண் குழந்தைகளுக்கு மெகந்தி, சிறுவர்களுக்கு டாட்டூஸ் இலவசமாக போடப்படுகிறது.

இந்த கண்காட்சிக்கு வரும் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்யும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும், இந்த கண்காட்சியில் கேரள பர்னிச்சர்கள் அனைத்தும் விலையில் இருந்து 70 சதவீதம் தள்ளுபடியில் வழங்கப்படுகிறது.

கண்காட்சி தினமும் பகல் 11 மணி முதல் இரவு 9 மணிவரை நடக்கிறது. 

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கண்காட்சி அரங்கின் முகப்பில் 30 அடி உயர செயற்கை டைனோசர் அனைவரையும் உற்சாகமாக வரவேற்கிறது. குதூகலிக்க வைக்கும் இந்த கண்காட்சி நாளை (திங்கட்கிழமை) இரவு 9 மணியுடன் நிறைவடைகிறது.

Tags:    

மேலும் செய்திகள்