ராகுல்காந்திக்கு ஆதரவாககாங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டம்
தேனியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடந்தது.
எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல்காந்திக்கு ஆதரவாக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சத்தியாகிரக போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில் தேனி பழைய பஸ் நிலையம் முன்பு சத்தியாகிரக போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், நகர தலைவர் கோபிநாத் மற்றும் மாவட்ட, வட்டார, நகர நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் பேசினர். காலை 10 மணியளவில் தொடங்கிய போராட்டம் மாலை 5 மணி வரை நடந்தது.