அங்கலகுறிச்சியில்சமூக வரைபடம் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு
அங்கலகுறிச்சியில் சமூக வரைபடம் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு
பொள்ளாச்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தோட்டக்கலை மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் ஊரக தோட்டக்கலை பணி அனுபவ திட்டத்தில் கிராம தங்கல் பணியின் கீழ் பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளில் வேளாண்மை சார்ந்த தகவல்களை திரட்டி வருகின்றனர். அங்கலகுறிச்சியில் மாணவர்கள் அபிஷேக், அரவிந்த், திருநாவுக்கரசு, அருண்குமார், திவ்யஜோதி நாயக், தினேஷ்குமார், கோபிநாத், குணால், ஹரீஷ் ஆகியோர் ஊரக பங்கேற்பு மதிப்பீட்டில் அமைந்து உள்ள சமூக வரைபடம் என்ற ஒரு பகுதியை வரைபடமாக வரைந்தனர். மேலும் மாணவர்கள் அந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அழைத்து கிராமத்தின் விவரங்களை கேட்டறிந்து அவர்கள் உதவியோடு சமூக வரைபடம் வரைந்தனர்.