மின்ஆளுமை திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் விவரங்களை பதிவு செய்ய கலெக்டர் அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்ஆளுமை திட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் விவரங்களை பதிவு செய்ய கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-10-25 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் விதவையரின் விவரங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் பதிவு செய்யாதவர்களின் விவரங்கள் மின்ஆளுமை திட்டத்தில் பதிவு செய்யப்பட உள்ளது. இனி வரும் நாட்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கிட வசதியாக முன்னாள் படைவீரர்கள், விதவைகள் தங்களின் படைவிலகல் சான்று, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, ஓய்வூதியம் பெறும் வங்கிக் கணக்குபுத்தகம் ஆகிய ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கோ.லட்சுமிபதி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்