தேவதானப்பட்டியில் கிணற்றில் ஆண் பிணம்

தேவதானப்பட்டியில் கிணற்றில் ஆண் பிணம் கிடந்தது

Update: 2022-08-22 16:19 GMT

தேவதானப்பட்டி காட்டுப்பள்ளி வாசல் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் உடல் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக தேவதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் வேல் மணிகண்டன் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். பெரியகுளம் தீயணைப்பு படையினரும் அங்கு வந்தனர்.

பின்னர் தீயணைப்பு படையினர் கிணற்றில் இறங்கி பிணத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடத்தியதில் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து உடலை கிணற்றில் வீசி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்