பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள ஆதிகருவண்ணராயர் கோவில் திருவிழாவுக்கு அனுமதிதாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு

தாசில்தார் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு

Update: 2023-02-01 20:32 GMT

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் வனச்சரகம் கெஜலட்டி ஆதி கருவண்ணராயன் பொம்மி தேவர் கோவில் மாசி மகமான அடுத்த மாதம் 5, 6, 7-ந் தேதிகளில் திருவிழா நடத்துவது சம்பந்தமாக சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை கூட்டம் நேற்று பகல் 11.30 மணி அளவில் நடந்தது. கூட்டத்திற்கு சத்தியமங்கலம் தாசில்தார் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். பவானிசாகர் வனச்சரகர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தக்கார் ஜெயபிரியா, பவானிசாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்பு துறை சார்பில் ரங்கராஜ், மண்டல துணை தாசில்தார் திருமூர்த்தி மற்றும் உப்பிலிய நாயக்கர் சமூகத்தினர் சுமார் 20 உட்பிரிவுகளை சேர்ந்த சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் மாசி மகம் திருவிழா நடத்த அரசு அனுமதி அளிக்கிறது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கூடுதலாக ஆம்புலன்ஸ் விடுதல், வனத்துறை சார்பில் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தல் உள்ளிட்டவைகள் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்