பாசூர், பாரியூர் கோவில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு

சிறப்பு வழிபாடு

Update: 2022-10-01 19:30 GMT

நவராத்திரியையொட்டி கோபி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் அம்மன் பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதேபோல் ஊஞ்சலூர் அருகே பாசூர் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் உள்ள குல விளக்கு அம்மன் கோவிலிலும் நவராத்திரி வழிபாடு நடந்தது. வராகி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி பாலித்தார். அம்மனுக்கு 9 வகையான புடவைகள், நெய்வேத்தியம், கனி வகைகள், தானிய வகைகள் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அம்மன் காலடியில் மஞ்சள் கயிறு வைத்து பூஜை செய்யப்பட்டது, இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் ஊஞ்சலூர் அருகே உள்ள கருக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவிலிலும் நவராத்திரி வழிபாடு நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்