அந்தியூரில் அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

அந்தியூரில் அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2023-09-07 22:53 GMT

அந்தியூர்

அந்தியூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் அந்தியூரில் நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி கிருஷ்ணவேணி தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இதில் அந்தியூர் பகுதியை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி அந்தியூரில் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்