தமிழகத்தில் 13 மாதங்களில் 12 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

தமிழகத்தில் 13 மாதங்களில் 12 ரவுடிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

Update: 2024-09-24 10:59 GMT

சென்னை,

தமிழகம் முழுவதும் கடந்த 13 மாதங்களில் என்கவுண்ட்டர்கள் மூலம் 12 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தாம்பரம் அருகே சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய 2 ரவுடிகளும், அக்டோபர் மாதம் சோழவரம் அருகே முத்து சரவணன், சண்டே சதீஷ் ஆகிய 2 ரவுடிகளும்,

நவம்பர் மாதம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ரவுடி குள்ள விஸ்வாவும், அதே மாதம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கொம்பன் ஜெகன், டிசம்பர் மாதம் காஞ்சீபுரம் அருகே ரகுவரன், கருப்பு பாட்ஷா ஆகிய 2 ரவுடிகளும் என்கவுண்ட்டர் மூலம் கொல்லப்பட்டனர்.

கடந்த ஜூலை மாதம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே துரை என்ற ரவுடியும், மாதவரம் அருகே ரவுடி திருவேங்கடமும், கடந்த 18-ந்தேதி அன்று வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே தாதா காக்கா தோப்பு பாலாஜியும், தற்போது ரவுடி சீசிங் ராஜாவும் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பதவி ஏற்றபின்னர் 3 என்கவுண்ட்டர்கள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்