தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் சதம் அடித்தது; அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பதிவு
சென்னை மீனம்பாக்கம் உள்பட தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி பதிவாகி உள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காரணமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை மீனம்பாக்கம் உள்பட 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி வெயில் பதிவானது. கரூரை பொருத்தவரையில் இயல்பான வெயில் அளவை விட நேற்று 3.7 செல்சியஸ் வரை அதிகமாக பதிவானதாக ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும் ஓரிரு இடங்களில் இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வேலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி...
தமிழ்நாட்டில் நேற்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி பதிவான வெயில் அளவு வருமாறு:-
சென்னை நுங்கம்பாக்கம் - 98.78 டிகிரி (37.1 செல்சியஸ்)
சென்னை மீனம்பாக்கம் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)
கோவை - 96.08டிகிரி (35.6 செல்சியஸ்)
கடலூர் - 100.4 டிகிரி (38 செல்சியஸ்)
தர்மபுரி - 98.6 டிகிரி (37 செல்சியஸ்)
ஈரோடு -102.56டிகிரி (39.2 செல்சியஸ்)
கன்னியாகுமரி - 91.4 டிகிரி (33 செல்சியஸ்)
கரூர் - 103.1 டிகிரி (39.5 செல்சியஸ்)
கொடைக்கானல் - 70.88 டிகிரி (21.6 செல்சியஸ்)
மதுரை நகரம் -101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)
மதுரை விமான நிலையம் - 102.2 டிகிரி (39 செல்சியஸ்)
நாகப்பட்டினம் - 97.7 டிகிரி (36.5 செல்சியஸ்)
பாளையங்கோட்டை - 99.14 டிகிரி (37.3 செல்சியஸ்)
சேலம் -100.58டிகிரி (38.1 செல்சியஸ்)
தஞ்சாவூர் -100.58 டிகிரி (38 செல்சியஸ்)
திருப்பத்தூர் -102.2 டிகிரி (39 செல்சியஸ்)
திருச்சி -101.66 டிகிரி (38.7 செல்சியஸ்)
திருத்தணி -101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)
தூத்துக்குடி -92.48 டிகிரி (33.6 செல்சியஸ்)
ஊட்டி -72.86 டிகிரி (22.7 செல்சியஸ்)
வால்பாறை - 82.4 டிகிரி (28 செல்சியஸ்)
வேலூர் - 104 டிகிரி (40 செல்சியஸ்)