நன்னடத்தை பிணையை மீறியவர் சிறையில் அடைப்பு
நன்னடத்தை பிணையை மீறியவர் சிறையில் அடைக்கப்பட்டார்
நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (வயது 23). இவர் மீது நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் 15 வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் முருகனுக்கு நிர்வாகதுறை நடுவரால் 6 மாதத்துக்கான நன்னடத்தை பிணை பெறப்பட்டது. ஆனால் கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி முருகன் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டார்.
எனவே நன்னடத்தை பிணையை மீறி செயல்பட்டதற்காக நாங்குநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, நெல்லை 2-ம் வகுப்பு நிர்வாகத்துறை நடுவர் முன்பு அறிக்கை சமர்ப்பித்தார். இதன் மீது விசாரணை நடத்திய நடுவர், பிணையை மீறி குற்ற செயலில் ஈடுபட்டதற்காக முருகனை 3 மாதங்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.