உரிமம் இல்லாமல் இயங்கிய கழிவுநீர் அகற்றும் வாகனம் பறிமுதல்

உரிமம் இல்லாமல் இயங்கிய கழிவுநீர் அகற்றும் வாகனம் பறிமுதல் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

Update: 2023-06-13 19:59 GMT

சேலம்

சேலம் மாநகராட்சி பகுதியில் உரிமம் இல்லாமல் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய ஆணையாளர் பாலச்சந்தர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகர நல அலுவலர் யோகானந் மற்றும் அலுவலர்கள் அழகாபுரம் புதூர் பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை ஆய்வு நடத்தினர். அப்போது அந்த வாகனத்திற்கு மாநகராட்சி மூலம் முறையான உரிமம் ஏதும் பெறாமல் கழிவுநீர் அகற்றும் பணிக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த வாகனத்தை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் வாகன உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து ஆணையாளர் பாலச்சந்தர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் அகற்ற பயன்படுத்தும் அனைத்து வாகனங்களும் முறையான அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும். கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்தும் போது பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து தற்காப்புடன் பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்