மதுபிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு! - "மதுபானத்திற்கு ரூ.10 கூடுதலாக வசூல்"
கோவையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
கோவை,
கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
பொது இடங்களில் வீசப்படும் மதுபான பாட்டில்களால் சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக பெறப்படும் 10 ரூபாயை, காலி பாட்டில்களை கொடுக்கும்போது திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள்.