வரதட்சணை கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி தீக்குளிப்பு; கணவர்-மாமியார் கைது

ஆண்டிமடம் அருகே வரதட்சணை கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி தீக்குளித்தார். இதையடுத்து அவரது கணவர் மற்றும் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-01 19:12 GMT

நிறைமாத கர்ப்பிணி

அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் நிர்மலா (வயது 22). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி புகழேந்தி (35) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. நிர்மலா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்தநிலையில் நிர்மலா தனது உடலில் மண்எண்ணைய் ஊற்றி தீக்குளித்து இறந்ததாக அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நிர்மலாவின் தாயார் நீலாவதி, ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்தார்.

கணவர்- மாமியார் கைது

இதனைதொடர்ந்து ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிர்மலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பரிசோதனை முடிந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தநிலையில் வரதட்சணை கொடுமையால் நிர்மலா தீக்குளித்து இறந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரது கணவர் புகழேந்தி, மாமியார் அமுதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

வரதட்சணை கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்