3 கோவில்களில் குடமுழுக்கு

கபிஸ்தலம், மதுக்கூர் பகுதிகளில் உள்ள 3 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update:2023-09-12 01:37 IST

கபிஸ்தலம், மதுக்கூர் பகுதிகளில் உள்ள 3 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வரசித்தி விநாயகர் கோவில்

கபிஸ்தலம் அருகே அலவந்திபுரம் கிராமத்தில் வரசித்தி விநாயகர், சந்திரசேகரசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி கடந்த 8-ந்தேதி முதல் காலை யாகசாலை பூஜை நடைபெற்றது. 9-ந்தேதி காலை 2-ம்கால மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்று, வரசித்தி விநாயகர், சந்திரசேகரசாமிகளுக்கு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் லட்சுமி, செயல் அலுவலர் சக்திவேல் மற்றும் பலர் செய்திருந்தனர்.

பாலசுப்பிரமணியசாமி கோவில்

மதுக்கூர் புலவஞ்சி கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணியசாமி கோவிலில் நேற்று குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திரவுபதி அம்மன் கோவில்

கபிஸ்தலம் அருகே ராமானுஜபுரம் கிராமத்தில் திரவுபதி அம்மன், சுந்தர மகா காளியம்மன், செல்லியம்மன் ,லட்சுமி நாராயணர் ஆகிய கோவில்களில் திருப்பணிகள் நிறைவடைந்ததையொட்டி குடமுழுக்கு நடந்தது.

இதையொட்டி நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்று, புனித நீர் கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மூலவர் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

பின்னர் திரவுபதி அம்மன் சன்னதியில் பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்