சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு: ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜர்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஆ.ராசா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Update: 2024-08-19 09:02 GMT

கோப்புப்படம்

சென்னை,

சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, இன்று சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

முன்னதாக வருமானத்திற்கு அதிகமாக 5 கோடியே 53 லட்சம் சொத்து சேர்த்ததாக 2015ல் தி.மு.க. எம்.பி ஆ.ராசா மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில்வேலன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ராசா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு வழக்கு ஆவணங்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதனிடையே, அடுத்த விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஆ.ராசா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்