தரம் குறைவான விதைகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
தரம் குறைவான விதைகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
போடிப்பட்டி
தரம் குறைவான விதைகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
விதை மாதிரி
விளைச்சலை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக விதைகள் உள்ளது. விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் விதை ஆய்வு துறை செயல்பட்டு வருகிறது. தரம் குறைவான விதைகள் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து கோவை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
அரசு, அரசு சார்ந்த, தனியார் துறைகளில் நடப்பாண்டில் விற்பனை செய்யப்படுகிற விதை குவியல்களில் இருந்து விதை ஆய்வாளர்களால் விதை மாதிரி சேகரிக்கப்பட்டு விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி தரம் உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு மேற்கொள்ளப்படும் விதை பரிசோதனையின் முடிவில் தரமற்றது என பெறப்படும் விதைகளின் முளைப்புத் திறனைப் பொறுத்து விதை சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகள் விதைகளை வாங்கும் போது தகுந்தபருவத்திற்கான விதைகளா என்பதை உறுதி செய்து கொள்வதுடன், அரசு உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். விதைகள் மற்றும் நாற்றுக்களை விற்பனை செய்யக்கூடிய விற்பனையாளர்கள் தங்களுடைய விற்பனை நிலையத்தில் பெயர் மற்றும் உரிமம் எண் பொருந்திய விற்பனை பட்டியலில் விதை விற்பனை செய்பவரின் கையெழுத்தும் விதையை வாங்குபவரின் கையெழுத்தும் பெற்று விற்க வேண்டும்.
விதைச் சட்டம்
விவசாயிகள் கொள்முதல் செய்யும் விதைகள் மற்றும் நாற்றுகளுக்குரிய விற்பனைப் பட்டியலில் விதைகளின் பெயர், ரகம், குவியல் எண் மற்றும் காலாவதி எண் ஆகியவை வாங்கும் விதைகளுடன் ஒத்திருக்கிறதா என கவனித்து வாங்க வேண்டும்.மேலும் உரிமம் இல்லாத விற்பனையாளர்களிடமிருந்து விதைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் விற்பனையாளர்கள் விற்பனை பட்டியல் வழங்காமல் விற்பனை செய்தாலோ அல்லது விற்பனை செய்த விதைகள் மற்றும் நாற்றுகளுக்கு போலி விற்பனை பட்டியல் வழங்கி இருந்தாலோ சம்பந்தப்பட்ட விதை விற்பனையாளர்கள் மற்றும் நாற்றுப் பண்ணைகள் மீது விதைச் சட்டங்கள் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.