வணிகர்கள் வரி ஏய்ப்பு செய்தால் ... வணிகவரித்துறை எச்சரிக்கை
வரி ஏய்ப்பு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் வரித்தொகை உடன் அபராதம் மற்றும் வட்டி வசூலிக்கப்படும் என வணிகர்களுக்கு வணிகவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
2021-2022 நிதியாண்டில் சுமார் 3.26 லட்சம் வணிகர்கள் ஒரு ரூபாய் கூட வரி செலுத்தவில்லை. 1.94 லட்சம் வணிகர்கள் ரூ.1000க்கும் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி செலுத்தி உள்ளனர்.
வணிகவரி கணக்கை சரிபார்த்து உரிய வரிகளை செலுத்த மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படும். மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியதன் மூலம் 22,430 வணிகர்கள் ரூ.64 கோடியை அரசுக்கு செலுத்தி உள்ளனர். வரி ஏய்ப்பு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் வரித்தொகை உடன் அபராதம் மற்றும் வட்டி வசூலிக்கப்படும் என வணிகவரித்துறை கூறியுள்ளது.