சிலை கடத்தல் வழக்குகள்: சிறப்பு விசாரணைக் குழு கோரி மேல்முறையீடு - தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்
சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி,
சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக யானை ராஜேந்திரன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி வி.ராமசுப்ரமணியன் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மனுதாரர் யானை ராஜேந்திரன் சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜராகி, தமிழ்நாட்டில் சிலை கடத்தல் தொடர்புடைய 41 வழக்குகளில் வழக்கு நாட்குறிப்புகள் காணாமல் போயுள்ளன. எனவே, ஓய்வுபெற்ற போலீஸ் உயரதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
அவரது வாதத்தை பதிவு செய்துகொண்ட சுப்ரீம் கோர்ட்டு, மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.