மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

கணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Update: 2022-08-24 13:35 GMT

வேலூரை அடுத்த கணியம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது. வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நரசிம்மன், கணியம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் செல்விரவி, கனிகனியான் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வேல்முருகன் வரவேற்றார்.

இதில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை, வங்கி கடன், தாட்கோ கடன், செயற்கை கால், கூடுதல் சக்கரங்கள் பொருத்திய வாகனம் மற்றும் புதிய தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவைகள் கேட்டு 168 பேர் மனு அளித்தனர். இதில் 43 மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி, ஆவின், மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்