மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

ஜோலார்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

Update: 2023-09-29 19:05 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார வள மையம் சார்பில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமில் 21 பேருக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் நல அடையாள அட்டைகள், 25 பேருக்கு பஸ் மற்றும் ரெயில் சலுகை பாஸ் உள்பட 88 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்புராயன் வழங்கினார்.

இதில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் முருகேசன், மாவட்ட மாற்றுத்திறன் நல முட நீக்கு வல்லுநர் இனியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழரசி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்