ஊர்க்காவல் படையினருக்கு அடையாள அட்டை

ஊர்க்காவல் படையினருக்கு அடையாள அட்டை

Update: 2022-11-03 18:45 GMT

நாகை கடலோர காவல் குழும போலீஸ் நிலையத்தில் ஊர்க்காவல் படையினருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர் ராஜா முன்னிலை வைத்தார். இதில் நாகை, வேதாரண்யத்தை சேர்ந்த 23 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இவர்கள் வேளாங்கண்ணி, பூம்புகார் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் கடலோர காவல் குழும போலீசாருக்கு உதவியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்