ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு

ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது.;

Update:2022-07-17 08:12 IST

சென்னை,

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியாகியது. இதனையடுத்து மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஐ.சி.எஸ்.இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை www.cisce.org, results.cisce.org என்ற இணையதளம் மூலமும், பள்ளிகள் வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாகவும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்