சென்னையில் மழை பாதிப்பு குறித்து பல்வேறு மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆய்வு

லஸ் சர்ச் பகுதிகளில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா குல்கர்னி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Update: 2023-12-05 09:26 GMT

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன்படி கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம் பகுதிகளில் கண்காணிப்பு அலுவலர் எம்.பிரதாப் ஆய்வு செய்து வருகிறார். லஸ் சர்ச் பகுதிகளில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா குல்கர்னி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதேபோல் திரு.வி.க. நகரில் கண்காணிப்பு அலுவலர் கணேசன் ஆய்வு செய்து வருகிறார்.

Full View

 

Tags:    

மேலும் செய்திகள்