"சிங்கப்பெண்களே உயர்கல்வியில் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்

சிங்கப்பெண்களே உயர்கல்வியில் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-05 14:55 GMT

சென்னை,

அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். விழாவில் உலகை வென்றிடத் துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்த நிலையில், புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் பயன்பெறவுள்ள பெண்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

"சிங்கப்பெண்களே...!,

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரிலான புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை கல்விக்காக எவ்வகையில் பயன்படுத்தலாம் என்று வழங்கப்பட்டுள்ள கையேட்டைப் பயன்படுத்தி பெற்றோரின் வழிகாட்டுதலுடன் உயர்கல்வியில் சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்