சித்தர் சொன்னதால் பேசினேன் - போலீசில் மகா விஷ்ணு வாக்குமூலம்

மாணவிகளை நல்வழிப்படுத்தும் விதமாகவே பேசினேன் என்று மகா விஷ்ணு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2024-09-08 05:03 GMT

சென்னை,

சென்னை அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சொற்பொழிவாளர் மகா விஷ்ணு மீது வன்கொடுமை சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டை கோர்ட்டில் நேற்று மாலை போலீசார் மகா விஷ்ணுவை ஆஜர்படுத்தினர்.

அவரை வரும் 20-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சென்னை புழல் சிறையில் மகாவிஷ்ணு அடைக்கப்பட்டுள்ளார். மகா விஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீதி இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மகா விஷ்ணு, "சித்தர் சொன்னதால் பேசினேன். சித்தர்கள் என்னிடம் பேசுவார்கள். அவர்களே என்னை வழிநடத்துகிறார்கள். பள்ளியில் தவறாக எதுவும் பேசவில்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மாணவிகளை நல்வழிப்படுத்தும் விதமாகவே பேசினேன், இதுபோன்று பல இடங்களில் பேசியுள்ளேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்