மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

விளாத்திகுளம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-08-09 21:31 IST

எட்டயபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.மறையூர் வடக்கு தெருவை சேர்ந்த முனியசாமி மகன் முனீஸ்வரன் (வயது 32). இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி சுமார் 7 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து முனீஸ்வரி கோபித்து கொண்டு, கடந்த மாதம்14-ந் தேதி விளாத்திகுளம் அருகேயுள்ள பல்லாகுளத்திலுள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனையடுத்து முனீஸ்வரன் பல்லா குளத்திற்கு வந்து தகராறு செய்ததுடன், முனீஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர். காயமடைந்த முனீஸ்வரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்