நாகர்கோவிலில் பெண்ணை தாக்கிய கணவர் கைது

நாகர்கோவிலில் பெண்ணை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-17 18:45 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் பெண்ணை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.

கைது

நாகர்கோவில் மீனாட்சிபுரம் அம்மாசிமடத் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 33). இவருடைய மனைவி சீதா (33). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் சம்பவத்தன்று ராதாகிருஷ்ணன், சீதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார். இதுபற்றி கோட்டார் போலீஸ் நிலையத்தில் சீதா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்