பெண்ணை தாக்கிய கணவர் கைது

பெண்ணை தாக்கிய கணவர் கைது

Update: 2022-05-22 23:23 GMT

மானூர்:

மானூர் அருகே உள்ள நாஞ்சான்குளத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 37). டிரைவர். இவரது 3-வது மனைவி வாசுகி. இவரையும், குழந்தைகளையும் சதீஷ்குமார் சரியாக பராமரிக்கவில்லை என்றும், இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், வாசுகியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மானூர் போலீசில் வாசுகி புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்