பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி கைது
பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
நெல்லை அருகே தாழையூத்து குறிச்சிகுளத்தை சேர்ந்தவர் பண்டாரம் மனைவி குமாரிதங்கம் (வயது 52). இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் மனைவி கலைச்செல்வி (24) என்பவர் மூலம் மகளிர் சுயஉதவி குழுவில் ரூ.1,600 கடன் வாங்கி இருந்தாராம். அந்த பணத்தை குமாரிதங்கம் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கலைச்செல்வியும், அவரின் கணவர் முருகனும் சேர்ந்து சம்பவத்தன்று குமாரிதங்கத்திடம் பணத்தை கேட்டு தகராறு செய்து அவரை தாக்கினர்.
இதுகுறித்து குமாரிதங்கம் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், கலைச்செல்வி ஆகியோரை கைது செய்தனர்.