மனிதநேய வார விழா விழிப்புணர்வு ஊர்வலம்
திருவாரூரில் மனிதநேய வார விழா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழாவினையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து ஊர்வலத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.இந்த ஊர்வலத்தில் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கொடிகால்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புலிவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திரு.வி.க அரசு கலைக்கல்லூரி, வ.சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலுடையார் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் கைகளில் ஏந்தி சென்றனர். இந்த நிகழ்ச்சியில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, அனைத்து தனி தாசில்தார்கள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.