மனித நேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம்

மனித நேய மக்கள் கட்சி பொதுக்கூட்டம்

Update: 2023-07-17 18:45 GMT


சிவகங்கை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி சிவகங்கை அரண்மனை வாசலில் பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் துல் கருணை சேட் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் அப்துல் முத்தலிபு, கமருல்ஜமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பாதுஷா, முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், அமைப்புச் செயலாளர் பாரூக், மாநில செயலாளர் சாதிக் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர் தலைவர் சித்திக் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்