சென்னையில் மனித உரிமை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் - அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் பங்கேற்பு

2025-ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லா தமிழகம் என்ற இலக்கை எட்டுவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2022-11-04 11:33 GMT

சென்னை,

சென்னையில் அமைந்துள்ள மாநில மனித உரிமை ஆணைய தலைமை அலுவலகத்தில் மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பாஸ்கரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மனித உரிமை ஆணைய அதிகாரிகள், அமெரிக்க தூதரக பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, கொத்தடிமை முறை ஒழிப்பு, மனித கடத்தல் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2025-ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லா தமிழகம் என்ற இலக்கை எட்டுவது தொடர்பான கருத்துக்களை அமெரிக்க அதிகாரிகளுடன், மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆலோசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்