அஞ்சல் வழியில் பிரசாதம் பெறுவது எப்படி?

அஞ்சல் வழியில் கோவில் பிரசாதம் பெறுவது எப்படி? என்பது பற்றிய விவரம் வருமாறு:-;

Update: 2023-05-25 18:45 GMT

தமிழகத்தில் பழனி தண்டாயுதபாணி கோவில் உள்பட 49 கோவில்களில் அஞ்சல் வழியில் பிரசாதம் அனுப்பப்படுகிறது. இதை பெற https://hrce.tn.gov.in/என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்துக்கு சென்று 'அஞ்சல் வழி பிரசாதம்' என்பதை கிளிக் செய்ய வேண்டும். உடனே அஞ்சல்வழியில் பிரசாதங்கள் அனுப்பப்படும் 49 கோவில்களின் பட்டியல்கள் அதில் இருக்கும். அந்த கோவில்களின் பெயர்களுக்கு நேராக உள்ள முன்பதிவு என்பதை கிளிக் செய்தால் புதிதாக ஒரு பக்கம் திறக்கும். அதில் பெயர், முகவரி, செல்போன் எண் போன்றவற்றை பூர்த்தி செய்து ஆன்-லைனில் பணம் செலுத்த வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்