தரமான விதை உற்பத்தி செய்வது எப்படி?

விருதுநகர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனரகம் தரமான விதை உற்பத்தி செய்வது எப்படி என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளது.

Update: 2023-03-03 19:33 GMT


விருதுநகர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனரகம் தரமான விதை உற்பத்தி செய்வது எப்படி என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளது.

விதை உற்பத்தி

இதுபற்றி மேலும் கூறியதாவது:-

சாதாரண தொழில்நுட்பங்களுடன் கூடுதலாக சில தொழில்நுட்பங்களை மட்டும் கடைப்பிடித்தால் நல்ல விதை உற்பத்தி உருவாக்கிட முடியும். எடுத்துக்காட்டாக சாதாரண நெல் விதை கிலோவுக்கு ரூ. 21 மட்டுமே. ஆனால் விதை உற்பத்தி செய்யப்பட்ட நெல் கிலோ ரூ.30 வரை கூடுதலான தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கலவன் அகற்றுவது முக்கியமாகும்.

கலவன் என்பது நெல் பயிர்களில் ஒரு சீரான உயரம் இல்லாமல் படிக்கட்டு போன்று மேலும் கீழும் இருப்பது. சில பயிர்கள் மிகவும் சீக்கிரமாக பூத்திருப்பதும் சில பயிர்கள் மிகவும் விதை பயிர் நெல் ரகத்தின் குணங்களிலிருந்து மாறுபட்டு தெரிகின்ற எல்லா பயிர்களும் கலவன்களாகும். கலவனை அகற்றாவிட்டால் விதையின் தரம் குறைந்து விடுகின்றன.

அறுவடை முறை

நல்ல தருணத்தில் அறுவடை மிக முக்கியம். முன்பே அறுவடை செய்தால் விதைகளை காய வைக்கும் பொழுது நிறம் மங்கி விடுவதுடன் விதைகள் உதிர்ந்து விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக நெற்கதிரை அடிக்கும் போது நெல் மணிகளை காயப்படாமல் பிரித்து எடுக்க வேண்டும். கல் மற்றும் இரும்பு போன்றவை மீது கதிர் அடித்தால் விதை மணிகளுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அறுவடை செய்யப்பட்ட கதிர்களில் உள்ள விதைகளின் ஈரப்பதம் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை இருக்க வேண்டும். விதைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் 5 மணி வரை நன்றாக கிளறி உலரவிட வேண்டும். விதைகளை சுத்திகரித்து சேமிக்க வேண்டும். ஒன்றின் மேல் ஒன்றாக 5 மூடைகளுக்கு மேல் அடுக்கி வைக்க கூடாது. தரமான விதைகள் தான் சாகுபடிக்கு மூலதனம். எனவே விதை உற்பத்தியில் கூடுதலான மகசூல் பெற்று பயனடையலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்