போலி ஆவணங்கள் மூலம் வீடு அபகரிப்பு; முதியவர் கைது

நெல்லையில் போலி ஆவணங்கள் மூலம் வீடு அபகரிப்பு செய்ததாக முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-16 20:07 GMT

நெல்லை மாவட்டம் திருங்குறுங்குடியை சேர்ந்தவர் பெரும்படையார் (வயது 55). இவருக்கு சொந்தமான வீடு வி.எம்.சத்திரம் வீட்டு வசதி வாரிய காலணியில் உள்ளது. இந்த வீட்டை சண்முகநாதனுகு (60), கடந்த 2021-ம் ஆண்டு வாடகைக்கு குடியிருக்க வழங்கினார். அதே ஆண்டு இறுதியில் சண்முகநாதன் வாடகை வீட்டை தானசெட்டில்மென்ட் என்ற பெயரில் தனது மனைவி பெயருக்கு போலி ஆவணங்களை தயார் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்தார். இதை அயறிந்த பெரும்படையார் நெல்லை நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவில் அளித்த புகாரின் பேரின் போலீசார் சண்முகநாதன், அவரது மனைவி, சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழக்கு மாநகர குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பேரில் மாநகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஆவுடையப்பன், சப்-இன்ஸ்பெக்டர் கற்பகவள்ளி மற்றும் போலீசார் வாடகை வீட்டை அபகரித்த வழக்கில் சண்முகநாதனை நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்