வீடு புகுந்து பொருட்கள் திருட்டு

திண்டிவனம் அருகே வீடு புகுந்து பொருட்கள் திருட்டு

Update: 2022-11-08 18:45 GMT

திண்டிவனம்

சென்னை வேப்பேரி பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 55). இவர் திண்டிவனம் அருகே உள்ள பாங்கொளத்தூரில் வீடு கட்டி வசித்து வருகிறார். சங்கரின் மகள் கனடாவில் பணிபுரிந்து வருவதால் அவரை பார்ப்பதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று வருவார். சம்பவத்தன்று தனது மகளின் திருமண ஏற்பாடு குறித்து பேசுவதற்காக சங்கர் வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் வெங்கேடஷ்(36) என்பவரிடம் வீ்ட்டை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு கனடா நாட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் சங்கரின் வீ்ட்டை பார்ப்பதற்காக வெங்கடேஷ் சென்றபோது வீ்ட்டின் முன்பக்க கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீ்ட்டின் பக்கவாட்டு ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீ்ட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ், கட்டில் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்