5 கிலோமீட்டர் தூரம் பின்பக்கமாக ஓடி ஓசூர் கல்லூரி மாணவர் சாதனை
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.
திருச்செங்கோடு,
உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் 1,100 மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட மாரத்தான் நடைபெற்றது. 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 3 கிலோமீட்டர் தூரம் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடந்தன. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்த பி.சி.ஏ. படிக்கும் கல்லூரி மாணவரான விஜய் என்பவர் 5 கிலோமீட்டர் தூரத்தை பின்பக்கமாக ஓடி கடந்தது பார்வையாளர்களையும், சக போட்டியாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.