மாணவர் விடுதி ஊழியர் மயங்கி விழுந்து சாவு

வெம்பாக்கத்தில் மாணவர் விடுதி ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2023-10-07 17:43 GMT

வெம்பாக்கத்தில் மாணவர் விடுதி ஊழியர் மயங்கி விழுந்து இறந்தார்.

செங்கம் தாலுகா துக்காபேட்டை பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 40). இவர் வெம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஜமுனா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் வினோத் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் விடுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர் கவியரசு, சமையலர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வினோத்தை செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வினோத்தின் தந்தை சந்திரன், பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்