குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி அருகே குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-05-10 16:02 GMT

குதிரை, மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டை கிராமத்தில் பூமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 26-ம் ஆண்டு குதிரை, மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும், 70-க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன.

இதில் பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, தேன்சிட்டு மாடு மற்றும் பெரிய குதிரை, சிறிய குதிரை என 7 பிரிவுகளாக பந்தயமானது நடைபெற்றது.

பரிசு

பந்தயத்தில் மாட்டு வண்டிகள் மற்றும் குதிரை வண்டிகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. மேலும் நிர்ணயிக்கப்பட்ட பந்தய இலக்கினை நோக்கி குதிரை, மாட்டு வண்டிகள் ஒன்றையொன்று முந்தி சென்றன.

பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவுகளிலும், முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளர் மற்றும் குதிரையின் உரிமையாளர்களுக்கு ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டது.

பந்தயத்தை காண சாலையின் இருபுறமும் திரளான ரசிகர்கள் கூடி நின்று கண்டு ரசித்தனர். அறந்தாங்கி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்