மாவட்ட வளையப்பந்து போட்டி

குந்தாரப்பள்ளி அரசு பள்ளியில் மாவட்ட அளவிலான வளையப்பந்து போட்டி நடந்தது. இதில் 180 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

Update: 2022-11-18 18:45 GMT

குருபரப்பள்ளி:

குந்தாரப்பள்ளி அரசு பள்ளியில் மாவட்ட அளவிலான வளையப்பந்து போட்டி நடந்தது. இதில் 180 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

வளையப்பந்து போட்டி

கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான வளையப்பந்து போட்டிகள் நேற்று நடந்தது. அந்த போட்டியை குந்தாரப்பள்ளி ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் அன்பரசன் தொடங்கி வைத்தார்.

இதில் மாவட்டம் முழுவதும் இருந்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 90 மாணவர்களும், 90 மாணவிகளும் என மொத்தம் 180 பேர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 14, 17 மற்றும் 19 வயது என 3 பிரிவுகளில், ஒற்றையர், இரட்டையர் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டன.

பரிசு

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலான வளையப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த 20 மாணவ, மாணவிகள் 2023 பிப்ரவரி மாதம் 3 முதல் 6 வரை காஞ்சீபுரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வளர்மதி, பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், உடற்கல்வி ஆசிரியர்கள் வெங்கடேசன், அண்ணாதுரை, உடற்கல்வி இயக்குனர் சிவப்பிரகாஷ், முகமது அலிஜின்னா, மாதேஷ், வேலுமணி, செந்தில்குமார் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்