கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திண்டிவனம் அரசு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-06-26 18:45 GMT

திண்டிவனம்:

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று காலை முதல் மாலை வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை பல்கலைகழகம் போல் அரசு கலைக் கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கும் யு.ஜி.சி. ஊதியம் வழங்க வேண்டும், அனைவருக்கும் பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு மருத்துவ விடுப்பு, பி.எப், இ.எஸ்.ஐ. மற்றும் வீட்டு வாடகை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட கவுரவ விரிவுரையாளர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்