போலீஸ் துறையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு; 10-ந்தேதி நடக்கிறது
போலீஸ் துறையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்ட போலீசாருடன் இணைந்து செயல்படும் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசியல் அமைப்புகளை சேராமலும், குற்ற வழக்கில் தொடர்பு இல்லாமலும் இருப்பது அவசியம். என்.சி.சி. மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கு கொடைக்கானல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த ஆட்கள் தேர்வு வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
எனவே விருப்பம் உள்ளவர்கள் திண்டுக்கல் பூ மார்க்கெட் அருகே உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். மேலும் ஆயுதப்படை மைதானத்தில்10-ந்தேதி நடைபெறும் தேர்வுக்கு அனைத்து சான்றிதழ்கள், ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வரவேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளித்து ஊர்க்காவல் படையில் சேர்க்கப்படுவார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.