ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்...!

சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

Update: 2023-03-08 09:32 GMT

சென்னை,

வட மாநிலத்தில் உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகையாகும். இந்த பண்டிகை வடமாநிலங்களில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி, ராஜஸ்தான், பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் சென்னையில் கணிசமாக வசித்து வருகின்றனர். அவர்கள் ஹோலி பண்டி கையை கொண்டாடும் விதமாக நேற்று இரவு பழையன கழிதல் என்ற அடிப்படையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இன்று காலையில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சவுகார்பேட்டை, வேப்பேரி, தியாகராயநகர், பட்டாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் வடமாநில மக்கள் வண்ண கலர் பொடி பூசி அன்பை பரிமாறிக்கொண்டனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் கலர் பவுடரை பூசியும், சாயம் கலந்த தண்ணீரை ஊற்றியும் மகிழ்ந்தனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியில் வந்து ஹோலியை கொண்டாடினர்.

இந்நிலையில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி வண்ணப் பொடிகளை தூவி, நடனமாடி உற்சாகமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்