பாளையங்கோட்டையில் பயங்கரம்: கிரைண்டர் கல்லால் தாக்கி வாலிபர் கொடூரக்கொலை- உறவினரிடம் விசாரணை

நெல்லையில் வாலிபர் கிரைண்டர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்;

Update:2022-07-09 02:25 IST

நெல்லையில் வாலிபர் கிரைண்டர் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

ராணுவ வீரர் மகன்

நெல்லை பாளையங்கோட்டை கோட்டூர் ரோடு திருஞான சம்பந்தர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். முன்னாள் ராணுவ வீரர்.

இவருடைய மகன் சுரேஷ் (வயது 30). சுப்பிரமணியன் சமீபத்தில் இறந்துவிட்டார். இவருடைய ஓய்வூதியம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுப்பிரமணியத்தின் மகன் சுரேஷ் மற்றும் மருமகன் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி பகுதியை சேர்ந்த கணேஷ் கைலாஷ் (45) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கல்லால் தாக்கி கொலை

இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது கணேஷ் கைலாஷ் மற்றும் சுரேஷ் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கணேஷ் கைலாஷ் அங்கிருந்த கிரைண்டர் குழவி கல்லை எடுத்து சுரேசை தாக்கினார். இதில் சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது பற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

விசாரணை

சுரேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷ் கைலாசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்