இந்து இளைஞர் முன்னணி மாநாடு
கடையநல்லூரில் இந்து இளைஞர் முன்னணி மாநாடு நடந்தது
கடையநல்லூர்:
தென்காசி மாவட்ட இந்து இளைஞர் முன்னணி நடத்திய மாற்றத்திற்கான இளைஞர்கள் மாநாடு கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பிராமண மகாஜன சங்கம் மஹாலில் நடந்தது. இந்து முன்னணி கடையநல்லூர் நகர பார்வையாளர் சிவா தலைமை தாங்கினார். இந்து இளைஞர் முன்னணி தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரசுதன், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவி சண்முகம், மாநில இணை அமைப்பாளர் பொன்னையா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் ஏராளமான இந்து இளைஞர் முன்னணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.