இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் தலைமை அலுவலகம் முன்பு இந்து முன்னணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு பஸ்களில் இந்து கடவுள்களின் படங்களை அகற்ற உத்தரவிட்டுள்ள போக்குவரத்துக்கழக அதிகாரிகளை கண்டித்தும், பஸ்களில் இருக்கும் இந்து கடவுள் படங்களை அகற்றக்கூடாது என வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சதீஷ் தலைமை தாங்கினார். கோட்ட தலைவர் சிவா முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் மனோகர், செயற்குழு உறுப்பினர் பாலு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் காந்தி, பொருளாளர் விஸ்வநாதன், செயற்குழு உறுப்பினர்கள் தனபால், தரணிதரன், நகர தலைவர் வெங்கடேசன், செயலாளர் பிரசாந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.