இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-19 18:29 GMT

பெரம்பலூர் மாவட்ட இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், ஒன்றிய பொதுச் செயலாளர் கதிரேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில் மலையடிவாரத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சாமி சிலைகள் உடைக்கப்பட்டதை கண்டித்தும், பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர்ந்து சாமி சிலைகள் உடைக்கப்படுவதை கண்டித்தும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்து முன்னணியின் திருச்சி கோட்ட செயலாளர் குணா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக மாவட்ட செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். முடிவில் மாவட்ட நிர்வாகி ஆனந்த் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்