நல்லப்ப சுவாமிகள் நினைவிடத்தில் இந்து முன்னணியினர் அஞ்சலி
விளாத்திகுளத்தில் நல்லப்ப சுவாமிகள் நினைவிடத்தில் இந்து முன்னணியினர் அஞ்சலி செலுத்தினர்.
எட்டயபுரம்:
இசை மகா சமுத்திரம் விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகளின் 59-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதைமுன்னிட்டு நல்லப்ப சுவாமிகளின் நினைவு ஸ்தூபி மற்றும் அவரது உருவ சிலைக்கு இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவச்சலம், மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் வி.பி.ஜெயக்குமார் கூறுகையில், நல்லப்ப சுவாமிக்கு நினைவு ஸ்தூபி அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் மணிமண்டபம் அமைத்து சிறப்பு செய்ய வேண்டும்.
மேலும் அவரது நினைவை போற்றும் வகையில் விளாத்திகுளத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் இசை ஆராதனை விழா அரசின் சார்பில் நடத்தப்பட வேண்டும் என்றார்.
இதில் இந்து முன்னணி வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் குமார், விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ராம.காளியப்பன், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணேசன், விளாத்திகுளம் இந்து முன்னணி நகரச் செயலாளர் வாலதி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.